×

நாட்டில் வெறுப்புணர்வை பரப்புவது தொடர்ந்தால் எதிர்கால இந்தியாவின் தந்தையாக கோட்சேதான் அழைக்கப்படுவார்: துஷார் காந்தி எச்சரிக்கை

மும்பை: நாடு முழுவதும் துவேஷமும் வெறுப்புணர்வும் பரப்பப்பட்டு வருவதாகவும், இது தொடருமேயானால் நாதுராம் கோட்சேதான் எதிர்கால இந்தியாவின் தந்தையாக இருப்பார் என்றும் மகாத்மா காந்தி அல்ல என்றும் மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி கூறினார். புனேயில் விழா ஒன்றில் பேசிய துஷார் காந்தி கூறியதாவது: நாட்டில் வெறுப்பை எதிர்த்துப் போராடுவதே இன்றைய காலத்தின் கட்டாயம் ஆகும். மக்களின் மனங்களில் அகிம்சையை விதைப்பதன் மூலம் வெறுப்பையும், வன்முறை எண்ணங்களையும் எதிர்த்துப் போராடலாம். புதிய இந்தியா உருவாகிக்கொண்டிருக்கிறது. ஆனால் வெறுப்புணர்வு நாட்டின் அரசியலை இயக்குகிறது. இது கவலை அளிக்கிறது. வெறுப்பை ஒழிப்போம் என்ற புதிய முழக்கத்தை உருவாக்கி வெறுப்பை ஒழிக்க வேண்டும். இல்லையெனில் அந்த வெறுப்புணர்வு மக்களை அடிமையாக்கிவிடும்.
புதிய இந்தியா நகரும் திசையை பார்க்கும் போது தேசத்தின் தந்தை மகாத்மா காந்தி அல்ல, அவரை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேதான் என்ற நிலை உருவாகும் அபாயம் உள்ளது. வெறுப்பும் துவேஷமும் நம் மனதில் புதிய இடங்களை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருப்பதை உணர்ந்து நாம் கவலைப்படவேண்டும். ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற மக்கள் சரியான லட்சியங்களுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் என்றார்

The post நாட்டில் வெறுப்புணர்வை பரப்புவது தொடர்ந்தால் எதிர்கால இந்தியாவின் தந்தையாக கோட்சேதான் அழைக்கப்படுவார்: துஷார் காந்தி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Godset ,India ,Tusshar Gandhi ,Mumbai ,Nathuram Godse ,Godse ,Tushar Gandhi ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...